gallery/green_garden_logo
gallery/200
gallery/200

சேனப்பாடி என்னும் ஓர் கிராமம்...!

 

  •  பல விவசாய உழைப்பாளிகள், கல்விமான்கள் மற்றும் அறிவாளிகளை பெற்றெடுத்து தன்னகத்தே கொண்ட பூமி.                     உப உணவூப்பயிற்செய்கைக்கு ஏற்ற மண், நெற் செய்கைக்கு ஏற்ற பொன்நிறமண் வளத்தையூம் கொண்ட விவசாய பூமி. வற்றாத நன் நீரூற்றைக் தன்னகத்தே கொண்ட செழிப்பான பூமி. வடக்கு எல்லையில் காவிரி ஆறு. கிழக்கு எல்லையில் அமராவதி ஆறு என்ற இரு பெரும் நீர் வளங்களை கொண்ட அழகான வளமான கிராமம்  எங்கள் கிராமம்  ...!

 

எங்கள் கிராமம்  :

எமது கிராமத்தின் கதை

gallery/1622011_770833999619554_8773808007499145458_n
gallery/stick_figure_working_laptop_desk_500_clr

coming soon...............

கிராமத்தின் அமைவிடம்...!                                          

 

  •  இந்தியா திருநாட்டில் தென்மாகாணத்தில் உள்ள தமிழ்நாட்டில் கரூர் வடக்கு பகுதியில் அமைந்த நெருர் கிராமசபை நிர்வாக பிரிவில் உள்ள கிராமம் சேனப்பாடி. கரூர் நகரில் இருந்து வடக்குப் பக்கமாகச் சுமார் பதினைந்து கிலோ மீட்டர் தொலைவில் அப்பால் சுமார் இரண்டு சதுர கிலோமீற்றர்களை பரப்பளவாகக் கொண்டது எமதுகிராமம். எமது கிராமத்தை . கிராமத்தின் வடக்கு எல்லையாக காவிரி ஆறு உள்ளது, மேற்கு பல கோவில்களும் உள்ளன...!

 

gallery/10269144_771779446191676_2444322183177450852_o

சேனப்பாடி எனும் பெயர்வரக்காரணம்...!

 

  •  சேனப்பாடி என்ற பெயர் எப்படி உருவாகியது என்பதற்கு வரலாற்று ரீதியான ஆதாரங்கள் உறுதியாக கிடைக்காவிட்டாலும் “சேனப்பாடி” என நாம் விருப்புடன் உள்ளத்திலிருந்து உச்சாரிக்கும் இப்பெயர் அமைந்ததற்கான காரணத்தை ஊர் மக்களால் வாய்மொழியாக வழங்கி வரும் தகவல் மூலம் கூறலாம். வாய்மொழியாக வழங்கி வருவதால், அவற்றை வெறும் கதைகள் என்று ஒதுக்கிவிட முடியாது. ஏனென்றால், இவை ஏற்றுக்கொள்ளக் கூடிய கதையாகவூம், கதைக்கான காரணங்கள் சிலவற்றை நாம் தோம்புகளிலும் காணக்கூடியதாக உள்ளது...!

 

gallery/11053083_636844346450735_1092248011554968319_n

---ரகு.....

 விவசாயம்...!

 

குறள் 1033:

 உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் 
 தொழுதுண்டு பின்செல் பவர்.

குறள் விளக்கம் :

 உழவு செய்து அதனால் கிடைத்ததைக் கொண்டு வாழ்கின்றவரே உரிமையோடு வாழ்கின்றவர், மற்றவர் எல்லோரும்  பிறரைத் தொழுது உண்டு பின் செல்கின்றவரே.

 

  •  என்ற வள்ளுவான் வாக்குக்கமைய இங்கு வாழும் பெரும் தொகையான மக்கள் உழவூத் தொழிலையே முதற்கண் தொழிலாகக் கொண்டு வருபவர்கள்.  சேனப்பாடிக் கிராமத்தில், நீர் வளம் மட்டுமல்ல நிலவளமும் இவ்வூர் மக்களுக்கு இயற்கையாக அமைந்த ஒன்றாகும்.  சேனப்பாடி களிமண் இவ்வூர் மக்களுக்குச் செம்மையான வாழ்வைச் செவ்வனச் செய்வதற்கேற்ப அமைந்துள்ளது. இங்கு வாழும் மக்கள் தம் நிலத்தைப் “பொன் விளையூம் பூமி” எனப்பெருமையாக கூறுவார்கள். வருடம் முழுவதும் எத்தகைய பயிரைச் செய்தாலும்  சேனப்பாடி மண்ணில் அப்பயிர்கள் செழிப்புடன் விளைவதும், வளமாவதும் இவ்வூர் மண்ணின் சிறப்புத் தன்மையாகும். மிகச் சிறந்த முறையில் நுட்பமாக விவசாயம் செய்வது இவ்வூர் மக்களின் ஆழ்ந்த அனுபவத்தையூம் ஆற்றலையூம் எடுத்துக் காட்டுகிறது. ஒவ்வொரு பயிரும் விளையூம் காலங்களையூம் அவற்றின் ஒவ்வொரு பருவங்களையூம் அவற்றின் தட்பநுட்பங்களையூம் நன்கறிந்து அவற்றிற்கேற்ப பயிர்ச்செய்யூம்; முறைகள் இவ்வூர் மக்களின் அனுபவக் கல்வியே...!
gallery/10885340_572848356179631_704024838973239984_n
  • கோரை, நெல், வாழை, கரும்பு, மரவள்ளி, மற்ற பயிறுகள்  இம்மண்ணில் செழிப்பாக வளர்வன.       இத்தகைய பயிறுகள் பெருமளவில் பயிரிடப்பட்டு, ஏற்றுமதி செய்யப்படுவன. 
  • ஆடு வளர்ப்பு மற்றும் மாடுகள் வளர்ப்பும் இங்கு அதிகம் காணப்படும்.
  • தென்னை மரம் அதிகம் காணப்படும்.

 கோவில்கள்...!

 

  • மாரியம்மன் கோவில் 
  • பகவதியம்மன் கோவில்
  • ஸ்ரீ அரங்கநாதன் கோவில்
  • அரவமடச்சிஅம்மன் கோவில்
  • செங்கமமோடன் கோவில்
  • பிள்ளையார் கோவில்
  • அரசமரதன் கோவில்

 

gallery/20150907035808
gallery/10906501_783732404996380_4414863855660666306_n
gallery/10882313_783743031661984_7670385100362457142_n

ஆறு மற்றும் வாய்க்கால்கள்...!

 

  • காவிரி ஆறு
  • ராஜா வாய்க்கால்  

 

gallery/dsc_0002
gallery/senappaadivaaikal

பாடசாலைகள்...!

 

  • கரூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி சேனப்பாடி.
  • அங்கன்வாடி சேனப்பாடி.

 

gallery/senappaadi school
gallery/anganwadi
...
000webhost logo